Ads Area

மாடறுப்பு தடை தொடர்பில் நேரில் கலந்துரையாட பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் கடிதம்.

இலங்கையில் மாடறுப்புக்கு தடை கொண்டுவரவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஆளும் கட்சி குழுக்கூட்டத்தில் தெரிவித்த நிலையில் அதற்கு அடுத்த நாள் நடைபெற்ற அமைச்சரவையில் குறித்த யோசனையை ஒரு மாத காலத்திற்கு தள்ளி வைப்பதாக அரசு அறிவித்ததுடன், மாடறுப்பு தொடர்பில் அனைத்து மட்டத்திலும் கலந்துரையாடவுள்ளதாகவும் அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அறிவித்தார்.

இலங்கையில் மாடறுப்பு தடை கொண்டுவரப்பட்டால் அது நாட்டின் பொருளாதாரத்தையும், விவசாயம், கால் நடை வளர்ப்பு உள்ளிட்டவற்றை பெரிதும் பாதிப்பதுடன் தனி மனித உணவு உரிமையிலும், மத உரிமைகளிலும் கை வைப்பதாக மாறிவிடும் என்பதால் பாராளுமன்றுக்கு இந்த யோசனை முன்வைக்கப்பட்டால் உரிமையை பாதுகாக்கும் வகையில் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - CTJ நீதி மன்றத்தை நாடும் என்பதுடன், பிரதமரை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடவுள்ளோம் என்றும் ஏற்க்கனவே அறிவித்திருந்தோம்.

அதன் அடிப்படையில் கலந்துரையாடுவதற்க்கான சந்தர்ப்பம் கேட்டு சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - CTJ சார்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.

ஊடக பிரிவு, 
சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - CTJ
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe