2019 ஆம் ஆண்டு அரசாங்கப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட சந்தேகத்திற்கிடமான ஆவணங்கள் தொடர்பான உதவி அரசாங்கப் பகுப்பாய்வாளர் (Government Examiner of questioned document -Government Analyst's Department) பதவிக்கான போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றில் ஒலுவிலை பிறப்பிடமாக கொண்ட ஜீஸான் முகம்மட் தேர்வாகியுள்ளார்.
ஒலுவில் முதலாம் பிரிவில் வசிக்கும் ஓய்வுபெற்ற சுகாதாரத்துறை ஊழியர் ஐ.எல் பதுறு சாஹிபு-கே.கைறுன் நிஸா தம்பதிகளின் மூன்று பிள்ளைகளில் 27 வயது நிரம்பிய ஜீஸான் முகம்மட் இரண்டாவது செல்வப் புதல்வன்.தனது ஆரம்ப கல்வியை அக்/அல்-ஹம்றா மகா வித்தியாலயத்திலும்,உயர் கல்வியை நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையிலும் பயின்றவராவார்.


