Ads Area

குவைத்தில் இலங்கைப் பணிப்பெண் ஒருவர் சித்திரவதை செய்து படுகொலை.

குவைத் நாட்டில் இலங்கை பணிப்பெண் ஒருவர் சித்திரவதை செய்யப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சித்திரவதைக்கு உள்ளான பெண் குவைத்தில் உள்ள அமிரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், குறித்த இலங்கை பணிப்பெண் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், 46 வயதான இலங்கை பணிப்பெண்ணை சித்திரவதை செய்ததற்காக குவைத் தம்பதியினர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

உடலில் வெட்டுக்காயங்கள், தீக்காயங்கள் இருந்தமைக்கான தடையங்களுடன் குறித்த இலங்கை பணிப்பெண் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப்பிரிவிற்கு மாற்றப்பட்ட போதிலும் சிறிது நேரத்தில் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், உயிரிழந்த இலங்கை பெண்ணுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் ஆய்வு செய்ய, சடலம் தடயவியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வீட்டில் ஏற்கனவே ஒரு பிலிபைன்ஸ் நாட்டு பணிப்பெண்னும் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

செய்தி மூலம் - https://gulfnews.com
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe