பாறுக் ஷிஹான்.
முஸ்லீம் மக்கள் எமது எதிரிகள் அல்லர் எனவும் எதிர்வரும் காலங்களில் தமிழ் மக்களுக்காக உயிரை கொடுத்து உரிமைகளை பெற்றுக்கொடுப்பேன் என தமிழர் மகா சபை சார்பில் கடந்த 9ஆவது பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டார்.
அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் அலுவலகத்தில் இன்று நடாத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் தனது கருத்தில்
முதலில் சுய தொழில் முயற்சி வாய்ப்புக்களை ஏற்படுத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.சில கிராமங்களில் மக்களிற்கு அரசியல் தெளிவின்மை காணப்படுகின்றது.கடந்த கால தேர்தல்களின் போது சில தரப்பினர் சாராயப்போத்தல்கள் பணம் கொடுத்து வாக்குகளை வாங்கிய சந்தர்ப்பங்கள் இருக்கின்றன.இதற்கான ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன.தமிழ் மககள் மாற்றத்தை விரும்புகின்றார்கள்.இதற்கு தமிழரசு கட்சி தலைவரின் தோல்வியை குறிப்பிட்டு கூற முடியும்.