குவைத் சமூக விவகார அமைச்சரும் பொருளாதார விவகாரத்துறை அமைச்சருமான மரியம் அல் அகீல் அவர்கள் சமூக விவகார அமைச்சகத்தில் பணிபுரியும் வெளிநாட்டினரை பணியிலிருந்து மாற்றுவதற்கான பணியைத் தொடங்கியுள்ளதாக அல் ராய் தினசரி தெரிவித்துள்ளது.
அமைச்சரின் அலுவலகத்தில் சட்ட ஆலோசகர், துணை செயலாளர், அலுவலகத்தில் கணக்கியல் நிபுணர், கூட்டுறவுத் துறை உதவி துணை செயலாளர் அலுவலகத்தில் ஒரு மூத்த சட்ட நிபுணர் போன்றோர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுமட்டுமின்றி சமூக பாதுகாப்புத் துறையில் சமூக மற்றும் உளவியல் சேவை நிபுணர்கள் உட்பட 34 வெளிநாட்டு தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

