Ads Area

விமான டிக்கட்களை முன் பதிவு செய்து பணத்தை பறிகொடுக்க வேண்டாம் சவுதி இலங்கைத் துாதரகம் எச்சரிக்கை.

சவுதியிலிருந்து இலங்கை செல்லும் விமானம் தொடர்பில் இதுவரை இலங்கையிலிருந்து எவ்வித அறிவித்தல்களும் வராத நிலையில் சிலர் இம்மாதம் (செப்டம்பர்) 10ம் திகதி விமானம் ஒன்று சவுதியிலிருந்து இலங்கை செல்லவிருப்பதாகக் கூறி விமானப் பயண டிக்கெட்களை முன் பதிவு செய்து கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றனர் இது முற்று முழுதாக ஒரு ஏமாற்று வேலையாகும் அத்தோடு இது உண்மைக்குப்புறம்பான ஒரு தகவல். இதனை நம்பி யாரும் டிக்கட்களை முன்பதிவு செய்து பணத்தை பறிகொடுத்து ஏமாந்து விட வேண்டாம். இது தொடர்பாக சவுதி அரேபியா றியாத்தில் உள்ள இலங்கைத் துாதரகம் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது அதனை கீழே வாசித்தறிந்து கொள்ளுங்கள்.

இலங்கைத் துாதரகத்தின் செய்தி.

செப்டம்பர் 10ம் திகதி இலங்கைக்கு ஓர் விமானம் (சிறீலங்கன் எயார்லைன்ஸ் அல்ல) புறப்படுவதாக கூறி பயண முகவர்கள் விமான டிக்கட்டுக்களின் விற்பனையை ஆரம்பித்துள்ளதாக அறியக் கிடைத்தது. கால அட்டவணையில் அது போன்ற விமானங்கள் இடம் பெறவில்லை என இலங்கையிலுள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

கீழுள்ள பற்றுச்சீட்டில் இந்த டிக்கட்டின் கட்டணம் திருப்பிப் பெற்றுக் கொள்ள முடியாது என குறிப்பிடப்பட்டிருப்பதானது டிக்கட்டை வாங்கியவர் பணத்தை இழப்பதற்கு அல்லது இந்த விமான சேவையை மாத்திரமே பயன்படுத்துவதற்கு நிர்பந்திக்கப்படுகிறார். எனவே பொதுமக்கள் இது போன்ற அதிகாரமற்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதனை எமது தூதரகம் கண்டிப்பதோடு இது போன்ற கொள்வனவுகளை மேற்கொள்வதற்கு முன்னர் மிக அறிந்து நடந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கின்றது.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe