Ads Area

சம்மாந்துறையில் நடைபெற்ற மர்ஹும் எம்.எச்.எம் அஷ்ரப் நினைவுப் பெருவெளி.

 (பாறுக் ஷிஹான்)

மனித நேய நற்பணிப்பேரவை சம்மாந்துறை - ஸ்ரீலங்கா மற்றும் இர்ஷாத் ஏ.காதர் நற்பணி மன்றம் இணைந்த ஏற்பாட்டில் முஸ்லீம்களின் தேசிய தலைமையாக திகழ்ந்த கலாநிதி மர்ஹும் எம்.எச்.எம் அஷ்ரப் சட்டமுதுமாணி அவர்களின் 20ஆவது ஆண்டு நினைவுப் பெருவெளி அண்மையில் (27)  சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் ஆரம்பமானது.

நிகழ்வின் ஆரம்பத்தில் மௌனப்பிராத்தனை இடம்பெற்று பின்னர் மனிதநேய நற்பணிப்பேரவையின் பிரதித்தலைவர் அஷ்ஷெய்க் அல்ஹாபிழ் ஏ.எல்.எம் றிப்கான் நளீமி கிராஅத் ஓதினார்.

தொடர்ந்து வரவேற்புரை மற்றும் தொடக்கவுரையினை மனித நேய நற்பணிப்பேரவை மற்றும் இர்ஷாத் ஏ.காதர் நற்பணி மன்றம் ஆகியவற்றின் ஸ்தாபகத் தலைவரும் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளருமான மனிதநேயன். இர்ஷாத் ஏ.காதர் நிகழ்த்தினார்.

பின்னர் தென்கிழக்கு பல்கலைக்கழக மொழித்துறைத் தலைவரும் மனிதநேய நற்பணிப் பேரவையின் பிரதான ஆலோசகருமான தலைமைப் பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் தலைமை உரையை நிகழ்த்தினார்.

நிகழ்வின் இடை நடுவில் அஸ்ரப் அவர்களின் கடந்த கால காணொளி திரையிடல் இடம்பெற்றது.

அடுத்து கவிதை பாடல் என பெரும் தலைவரை பற்றி மாணவர்களினால் அரங்கேற்றப்பட்டன. அஸ்ரப் எனும் பன்முக ஆளுமை என்ற தலைப்பில் பேரவையினால் நடாத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்ற வெற்றியாளர் ஜே.வஹாப்தீன் பேச்சு ஒன்றினை நிகழ்த்தினார்.

நிகழ்விற்கு நினைவுப் பேருரையினை பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ சுமந்திரன் உரையாற்றினார்.

பிரதம அதிதியாக கலந்து கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.எஸ்.ஸூஹைர் அஸ்ரப்பின் ஆளுமை குறித்து பேசினார்.

குறித்த நிகழ்வு துஆப்பிரார்த்தனை நடுவர்களுக்கான ஞாபகச்சின்னங்கள் வழங்கல் பரிசளிப்பு நிகழ்வு நன்றியுரை என சிறப்பாக நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.









Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe