இலங்கையிலிருந்து வெளிநாடு செல்லும் அனைத்துப் பயணிகளும், தாம் புறப்படுவதற்கு 72 மணித்தியாலத்திற்குள் PCR பரிசோதனைகளை மேற்கொள்வது கட்டாயமானதாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வரையறுக்கப்பட்ட விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, இந்த நடவடிக்கை நாளை மாலை 6.00 மணி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.