Ads Area

எச்சரிக்கை...!!!! காருக்குள் உறங்கிய நபர் அடுத்த நாள் காலை சடலமாக மீட்பு!

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் கடந்த சனிக்கிழமை சுந்தர் பண்டிட் என்னும் நபர் வார இறுதியை கொண்டாடுவதற்காக தனது கிராமத்தில் இருந்து நொய்டாவில், செக்டார் 107-ல் உள்ள வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் சனிக்கிழமை இரவு நன்கு மது அருந்திவிட்டு, மது போதையில் ஏசி-ஐ ஆன் செய்துவிட்டு கார் கதவுகளை அடைத்துவிட்டு காருக்குள்ளேயே உறங்கியுள்ளார். அடுத்த நாள் காலை அவரை தேடி அவரது சகோதரர் கார் பார்க்கிங் பகுதியில் பார்க்கும்போது, சுந்தர் பண்டிட் மயங்கிய நிலையில் காருக்குள்ளையே இருந்துள்ளார்.  

இதனால் அதிர்ச்சியடைந்தவர், சுந்தர் பண்டிட்டை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். மருத்துவமனையில் அவரை சோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். கொரோனா நோய் தொற்று காலம் என்பதால், குடும்பத்தினரும், நெருங்கிய உறவினர்களும் இணைந்து சுந்தர் பண்டிட்டின் உடலை தகனம் செய்தனர். 

இதுக்குறிந்து அறிந்த போலீசார், தாமாக முன்வந்து சுந்தர் பண்டிட்டின் குடும்பத்திடம் விசாரணை நடத்தினர். அப்போது, சுந்தர் பண்டிட்டின் சகோதரரோ, சுந்தருக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதாகவும், சனிகிழமை இரவு மது அருந்திவிட்டு காருக்குள் ஏசியை ஆன் செய்து உறங்கியதால் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறினார். மேலும் இந்த சம்பவத்தில் சந்தேகத்திற்கு இடமான நிகழ்வுகள் எதுவும் நடக்கவில்லை என்றும் தெரிவித்தார். 

கார் எஞ்சின் ஆன் செய்யப்பட்டு, ஏசியும் ஆன் செய்யப்பட்டு, காரின் கதவுகள் பூட்டப்பட்டிருந்தால் கார்பன் மோனாக்ஸைடு அதிகமாகி மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற சம்பவங்கள் ஏற்கெனவே பல நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கார் ஓட்டுநர்கள் நெடுந்தொலைவு பயணம் செய்யும்போது இரவு நேரத்தில் காருக்குள்ளேயே உறங்குவது வழக்கம், அவ்வாறு உறங்கும்போது ஏசியை இயக்காமலோ அல்லது கதவுகளை திறந்து வைத்துக்கொண்டோ உறங்குவது நல்லது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe