கத்தார் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கார்களில் இருந்து பல திருட்டு சம்பவங்களில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை குற்றவியல் புலனாய்வு துறை கைது செய்துள்ளது.
கார்களில் இருந்து பொருட்கள் திருட்டு போவதாக பல பேர் அளித்த புகாரின் அடிப்படையில், ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட்டு, தேடுதல் மற்றும் விசாரணை நடத்திய பிறகு, குற்றம் சாட்டப்பட்ட நபர் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவையான சட்ட அனுமதியுடன் நடத்தப்பட்ட விசாரணைக்கு பின்னர், அரபு நாட்டைச் ஒருவர் தான் குடியிருப்பு பகுதிகளில் உள்ள கார்களில் திருடி வந்ததாக ஒப்புக்கொண்டார்.
கைது செய்யப்பட்ட நபர், குறிப்பாக மூடப்படாத அல்லது சரியாக பூட்டப்படாத கார்களை குறிவைத்து திருட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரிடமிருந்து பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கு மேல் விசாரணைக்காக அதிகாரிகளிடம் அனுப்பப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்களின் வாகனங்களை ஒழுங்காக பூட்டிக் கொள்ளவும், கார்களில் உள்ள பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்ளவும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வாகனங்களை நிறுத்துவதை தவிர்க்குமாறும் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், இவ்வாறான வழக்குகளை பற்றி புகார் அளிக்க உதவி எண் 999 அழைக்குமாறு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
Qatar Mic Set - News