டுபாய் காவலத்துறையினர் இவர்களை தங்காலிக மாற்று இடங்களில் தங்க வைப்பதற்கு ஏற்பாடுகளை செய்து வருகின்ற போதும் அங்கு போதிய இடவசதியின்மையினால் தாமதம் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
டுபாய் பூங்காக்களில் தங்கி வந்த 21 இலங்கையர்கள் கடந்த செப்டம்பர் மாதம் தற்காலிக முகாம்களுக்கு டுபாய் காவல் துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
தற்போது இலங்கையில் கொரோனா மீண்டும் பரவ ஆரம்பித்துள்ள சூழ்நிலையில் வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்களை மீள் அழைத்து வருவதை இலங்கை அரசும் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதனால் இவர்கள் மேலும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
ஐக்கிய அரபு ராஜ்ஜியத்திலிருந்து இதுரை 9000 இலங்கையர் தாய்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் இன்னும் 6000 பேர் வரை இதுவரை தாய்நாடு செல்ல முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
டுபாய் பூங்காக்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களில் காரியால உதவியாளர் வேலை செய்தவர், கிராபிக்ஸ் டிசைனர், வீட்டுப் பணிப் பெண்கள் என பலரும் அடங்குகின்றனர்.
தமிழில் - சம்மாந்துறை அன்சார்
செய்தி மூலம் - http://www.newswire.lk