குவைத் இலங்கை தூதரகத்தின் அதிகாரிகள் மற்றும் தூதரக காப்பகத்தில் (Safe House) தங்க வைக்கப்பட்டிருந்த புலம்பெயர் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் , நோய் பரவலைக் கட்டுப்படுத்த, பொது மக்கள் ஒன்று கூடுவதனை தவிர்க்கும் நோக்கில் கடந்த ஒக்டோபர் 9ம் திகதி குவைத்திலுள்ள இலங்கைத் தூதகரம் மூடப்படடது. இவ்வாறு மூடப்பட்ட தூதகரத்தின் பணிகள் இன்று (ஒக்டோபர் -18) முதல் பகுதியளவில் திறக்கப்பட்டுள்ளதாக தூதரகம் அறிவித்துள்ளது. (Thanks - Qatar Tamil)