Ads Area

கட்டாரில் தற்கொலை செய்து கொண்ட இலங்கையைச் சேர்ந்த நடராஜா திவிதரனின் உடல் கட்டாரில் நல்லடக்கம்.

(புகழ் ) 

கட்டாரில் தற்கொலை செய்து கொண்ட இலங்கை துறைநீலாவணையை  சேர்ந்த நபரின் உடல் நேற்று (07.11.2020) கட்டார் டுக்கான் நகரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மட்டக்களப்பு துறைநீலாவணையில் இருந்து தொழில் நிமிர்த்தம் காரணமாக கட்டார் நாட்டிற்கு சென்றிருந்த நடராஜா திவிதரன் எனும் இளைஞர் கடந்த மாதம் 18 திகதி கட்டார் நாட்டில் தற்கொலை செய்து கொண்டார். 

இவர் 10 வருடகாலமாக கட்டாரில் தொழில் புரிந்துவந்துள்ளார். 

குறித்த நபரின் உடலை இலங்கைக்கு எடுத்து வரமுடியாத அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு நேற்று (07.11.2020) மாலை கட்டார் (Qatar) டுக்கான் (dukhan) நகரில் உள்ள மயானத்தில் கட்டார் வாழ் நண்பர்கள், உறவினர்கள் இணைந்து நல்லடக்கம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Thanks - battinews












Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe