கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஏற்ப, கார்களில் நான்கு நபர்கள் மட்டுமே செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கத்தார் உள்துறை அமைச்சகம் அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், வெளியே செல்லும் போது ஒரு காரில் டிரைவர் உட்பட நான்கு பேர் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது என்றும், நான்கு பேருக்கு மேல் செல்ல அனுமதியில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும், குடும்பங்கள் இதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், பொதுமக்கள் இதனை தவறாமல் பின்பற்றும் படியும், COVID-19-க்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிப்பது பொதுமக்களின் தேசிய மற்றும் தார்மீக கடமை என்றும் உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.