சம்மாந்துறை வைத்தியசாலையில் வெளியூரிலிருந்து அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், இவ் வைத்தியசாலையில் நோயாளிகளின் அனுமதியினை மட்டுப்படுத்த வேண்டியுள்ளது. ஆகவே நாட்பட்ட நோயாளிகளான வயோதிபர்கள், சிறுவர்கள் ஆகியோர் வைத்தியசாலைக்கு அவசரத் தேவைகளுக்காகவன்றி வருவதை முடியுமானவரை தவிர்த்துக் கொள்ளுமாறும், நோயாளிகளை பார்வையிட யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதை இத்தால் பொதுமக்களுக்கு அறியத் தருகின்றோம்.
மேலும் கிளிக் நோயாளிகளுக்கு அவர்களுக்குத் தேவையான மருந்துகளை வழமை போன்று தபால் மூலமாக விநியோகிக்கப்படும். இதுசம்பந்தமான மேலதிக விபரங்களுக்கு 0777063298 எனும் இலக்கத்தை தொடர்பு கொள்க.
இப்படிக்கு.
டொக்டர் - எம்.எச்.எம். ஆஷாத்
வைத்திய அத்தியட்சகர்
சம்மாந்துறை வைத்தியசாலை.