முஹமட் நசிம்.
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை ஊழியர்கள் எவருக்கும் கொவிட் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறக்காமத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளை அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதால்,
நேற்று சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் 34 பேரருக்கு மேற் கொள்ளப்பட்ட PCR பரிசோதனை முடிவுகளின் படி ஒருவருக்கும் கொரொணா தொற்று ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஆசாத்.எம் ஹனீபா தெரிவித்துள்ளார்.