சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் நகரில் எக்சிட் 26, மக்காவுக்கு செல்லும் வீதி அமைந்துள்ள பகுதியில் இலங்கையைச் சேர்ந்த வீட்டுப் பணிப்பெண் ஒருவரது கடவுச் சீட்டு (பாஸ்போட்) ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் எக்சிட் 8 பகுதியில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த நண்பர் ஒருவர் எங்களது இணையத்தளத்திற்கு தெரிவித்துள்ளார்.
தான் வசிக்கும் எக்சிட் 8 பகுதியிலிருந்து எக்சிட் 26 (மக்கா வீதி) பகுதிற்கு தனது வீட்டு மேடத்தின் உறவினர் ஒருவரின் வீட்டுக்கு சென்ற வேளை குறித்த பாஸ்போட்டினை அவர் வீதியில் கண்டெடுத்துள்ளதாக தெரிவித்தார்.
கண்டெடுக்கப்பட்ட பாஸ்போட் தற்போது அவரிடமே இருப்பதாகவும், உரியவரிகள் தொடர்பு கொள்ளும்படியும் வேண்டியுள்ளார்.
பாஸ்போட்டில் உள்ளவர் இலங்கையில் களுத்துறைப் பிரதேசத்தைச் சேர்ந்த பொல்வத்த லியனகே இரிஷ்சா எனும் பெயருடைய சிங்களப் பெண்ணாகும்.
ஆகவே...இவர் பற்றித் தெரிந்தவர்கள் கீழ்க் காணும் தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
தொடர்புக்கு (அஷ்ரப் - 0539069435)