Ads Area

ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு, சம்மாந்துறை பிரதேசமும் பரிசீலிக்கப்பட்டது.

மொஹமட் அன்ஸிர் -

கொரோனாவினால் மரணிக்கும் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு பரீசீலிக்கப்பட்ட பகுதிகளில் சம்மாந்துறையும் உள்ளடங்கி இருந்ததாக நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறிய வருகிறது.

கடல் மட்டத்தில் இருந்து தூரமான பகுதி மற்றும் முஸ்லிம்கள் செறிந்து வாழும் என்ற அடிப்படையில் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கான பகுதியாக சம்மாந்துறையும் பரிசீலிக்கப்பட்டுள்ளது.

எனினும் இறுதியில் மன்னார் மாவட்டம் கொரோனாவால் மரணிக்கும் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு உகந்த பகுதியாக நிபுணர் குழுவொன்றினால் அடையாளப்படுத்தப்பட்டதை அடுத்தே, அம்மாவட்டத்திலேயே நல்லடக்கம் செய்வதென்ற இறுதி முடிவு எட்டப்பட்டுள்ளது.

செய்தி - ஜப்னா முஸ்லிம்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe