Ads Area

சிறுபான்மை மக்கள் மஹிந்த அரசை நிராகரித்தாலும் மக்களை நிராகரிக்காத மஹிந்த அரசு.

நூருல் ஹுதா உமர்

மருதமுனை மக்களின் நீண்ட நாள் கனவாக இருந்து வந்த மருதமுனை கடற்கரை வீதி தற்பொழுது கார்பட் வீதியாக மாற்றப்படுகின்றது. கடந்த சுனாமி அனர்த்தத்தின் பின்னர் சுமார் 16 வருடங்களின் பின்னர் கடற்கரை வீதி நிர்மாணம் செய்யப்படுகின்றது. இவ்வேலைத்திட்டத்தை சிறப்பாக முன்னெடுக்கும் மருதமுனையின் பிரபல சமூக சேவகரும் கல்முனை பிரதேச செயலக கிராம அபிவிருத்தி அதிகாரியுமான எம்.ஐ.எம்.முஹர்ரப் பாராட்டப்பட வேண்டியவரே என தேசிய காங்கிரசின் மருதமுனை இளைஞர் அமைப்பாளர் சமட் ஹமீட் தெரிவித்தார்.

அல் - மீஸான் பௌண்டசனின் மருதமுனை கிளை நேற்று மாலை ஏற்பாடு செய்திருந்த இளைஞர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர்களிடம் மக்களினால் பலதடவைகள் எடுத்துரைக்கப்பட்டும்  சாதிக்க சாத்தியமற்ற விடயம்தான் இந்த வீதி அபிவிருத்தி. மருதமுனை மண்ணிண் நீண்ட காலத்தேவையாக இருந்த இந்த நிரந்தரமான அபிவிருத்தியான கடற்கரை வீதி காபட் இடப்பட்டுள்ளது. இதற்கு ஆட்சி அதிகாரம் இல்லாமல் தன் ஆளுமை கொண்டு தனித்துவ இறைமையை கையில் எடுத்து பல இடர்களுக்கு மத்தியில் எம்மண்ணை அழகு செறிய செய்த எம்மண்ணிண் மகன் எம்.ஐ.எம்.முஹர்ரப் அவர்கள் காட்சிபேதங்களுக்கு அப்பால் பாராட்டப்பட வேண்டியவர்.

மருதமுனை கடற்கரை வீதியில் தேசிய காங்கிரசின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் பொதுக்கூட்டத்தின் போது மொட்டு ஆட்சிக்கு வந்தால் இந்த வீதியை காபட் வீதியாக மாற்றப்படும் என்றும் மக்கள் மஹிந்த அரசை ஆதரிக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தோம். ஆனாலும் மருதமுனை மக்கள் மொட்டுக்கு பாரியளவில் வாக்களிக்கா விட்டாலும். வாக்களித்த சிலருக்கு மஹிந்த அரசு வழங்கிய கௌரவமாகவே இந்த சேவையை நோக்கலாம். கடந்த காலங்களில் மருதமுனைக்கு பாரிய அபிவிருத்தியையும் சேவைகளையும் செய்தவர்கள் மக்கள் அதிகம் வாக்களிக்க தவறும் தேசிய காங்கிரசின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களும் முன்னாள் ஜனாதிபதியும், இந்நாள் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கங்களுமே என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அகில இலங்கை மக்கள் காங்கிரசையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசையும் நம்பி ஏமாந்த சமூகமாக இருக்கும் அம்பாறை மாவட்ட மக்கள் இனியாவது நாட்டின் நலன் கருதி சரியான பாதைக்கு தங்களை திருப்பிக்கொள்ள வேண்டும் என்றார்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe