Ads Area

சவுதி அரேபியாவில் உள்ள பிரான்ஸ் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு.

சவுதி அரேபியாவில் ஜித்தா பகுதியில் உள்ள பிரான்ஸ் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சவூதி அரேபியாவின் ஜித்தாவில் ஐரோப்பிய இராஜதந்திரிகள் கலந்து கொண்ட முதலாம் உலகப் போரின் முடிவை நினைவுகூரும் 102 ஆண்டு விழாவில் குறித்த குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இக் குண்டுவெடிப்பில் பலர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் குண்டுவெடிப்பில் ஏற்பட்ட சேதங்கள் குறித்த முழு தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

இது குறித்து தகவல் வெளியிட்டள்ள பிரான்ஸ் தூதரகம்,

"இந்த கோழைத்தனமான, நியாயப்படுத்த முடியாத தாக்குதலை பிரான்ஸ் கடுமையாக கண்டிக்கிறது." என தெரிவித்துள்ளது.

பிரான்ஸில், முஹம்மது நபி அவர்களின் கேலிச்சித்திரங்கள் காரணமாக தொடரும் தாக்குதலில், கடந்த மாதம் 16 ஆம் திகதி வரலாற்று ஆசிரியர் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டார். இதனுடன் தொடர்பு பட்டதாக பிரான்ஸிலும் சவுதி அரேபியாவின் பல தாக்குதல் சம்பவங்கள் பதிவாகின.

இந்நிலையில் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், இஸ்லாமிய தீவிரவாதத்தை எதிர்கொள்வதாக சபதம் செய்ததற்காக உலகின் பெரும்பகுதி முஸ்லிம்கள் அவர் மீது தமது கோபத்தை வெளிப்படுத்தியிருந்தனர். இதன் பின்னனியிலேயே இக் குண்டுவெடிப்பு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe