Ads Area

அபுதாபியில் 144 மாடிகள் பிரமாண்ட கட்டிடம் பத்தே நொடிகளில் வெடி வைத்து தகர்ப்பு.

அபுதாபி

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் 144 தளங்கள் கொண்ட 4 கட்டிடங்கள் வெடிவைத்து தகர்க்கப்பட்டது. மினா சையது துறைமுகப்பகுதியை மீட்டுருவாக்கம் செய்யும் நடவடிக்கைகளை ஐக்கிய அரபு அமீரக அரசு மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, புகழ்பெற்ற மினா பிளாசா டவர்ஸை தகர்க்கும் முடிவு எடுக்கப்பட்டது. இதனையடுத்து, 6 ஆயிரம் கிலோ வெடிபொருட்கள் கொண்டு இந்த கட்டடம் நேற்று வெற்றிகரமாக தகர்க்கப்பட்டது.

144 தளங்கள் கொண்ட பிரமாண்ட கட்டடங்கள் பத்தே நொடிகளில் இடிந்து தரைமட்டமாகும் வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe