இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கையை இன்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிடுவார் என்றும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
புதிய முறையின் கீழ், வெளிநாட்டிலிருந்து வரும் ஒரு இலங்கையர்கள் கட்டாயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும், பிறகு அவர்களுக்கு பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்படும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
பி.சி.ஆர். சோதனை முடிவுகளில் ஒருவருக்கு கொரோனா தொற்று இல்லையெனும் பட்சத்தில் அவர் மீண்டும் 14- நாட்களுக்கு வீட்டுத் தனிமைப்படுத்தலில் இருக்கத் தேவையில்லை என்றும் ராணுவத் தளபதி கூறியுள்ளார்.
வரும் வாரங்களில் சுற்றுலாப்பயணிகளுக்காக கட்டூநாயக்க விமான நிலையத்தை மீண்டும் திறக்க பல ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதே போன்று வெளிநாட்டிலிருந்து திரும்புபவர்களிலால் விமான நிலையத்தில் ஏற்படும் தாமதங்களை குறைக்க விமான நிலைய அதிகாரிகளுடன் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும் லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
செய்தி மூலம் - http://www.newswire.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.