(பைஷல் இஸ்மாயில்)
பல்கலைக்கழகங்களின் UI கிறீன்மெட்ரிக் – 2020 இக்கான தர வரிசையில், உலகளவில் 331 ஆவது இடத்தை இலங்கையின் தென்கிழக்கு பல்கலைக்கழகம் (SEUSL) பெற்று வெள்ளி தர வரிசையை அடைந்துள்ளது.
உலகளவில் பங்குபற்றிய 992 பல்கலைக்கழகங்களில் சகல மட்டத்திலான புள்ளிகளையும் உள்ளடக்கியதாக உலகளவில் 331 ஆவது இடத்தை இலங்கையின் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் (SEUSL) பெற்று வெள்ளி தர வரிசையை அடைந்துள்ளது.
இப்பட்டியலில் 6 இலங்கை பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன, அவற்றுள் ஒட்டு மொத்தமாக 5,975 மதிப்பெண்களுடன் தென்கிழக்கு பல்கலைக்கழகம் இலங்கையில் முதலிடத்தில் உள்ளது. அத்துடன் வெள்ளி தர வரிசையையும் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம் பெற்றுள்ளது.
களனி பல்கலைக்கழகம், பேராதனைப் பல்கலைக்கழகம், கொழும்பு பல்கலைக்கழகம், ருகுணு பல்கலைக்கழகம் என்பன அடுத்த இடங்களை முறையே பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.