Ads Area

கொரோனா நோயாளியுடன் மருத்துவமனை கழிவறையில் செக்ஸ் வைத்து கொண்ட நர்ஸ்.

கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் பல அதிர்ச்சிகரமான மற்றும் வினோதமான சம்பவங்கள் பல இடங்களில் அரங்கேறி வருகிறது. தற்போது கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் பணியிலிருந்த செவிலியர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ஒருவருடன் பாலியல் தொடர்பில் ஈடுபட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

இந்தோனேசியாவில் ஜகார்த்தாவில் அமைந்துள்ள விஸ்மா அட்லெட் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் கழிவறையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. கொரோனா நோயாளி சமூக வலைதளத்தில் பகிர்ந்த வீடியோ மூலம் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கொரோனா நோயாளி பகிர்ந்த வீடியோவில் செவிலியரின் பிபிஇ கிட் கழிவறையின் கீழ் கிடந்துள்ளது. இந்த வீடியோ தற்போது பூதாகரமாகி உள்ள நிலையில் செவிலியர் மருத்துவமனையிலிருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் கொரோனா நோயாளி உடன் அவர் பாலியல் தொடர்பில் இருந்ததால் அவரும் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மருத்துவ பரிசோதனையின் முடிவில் செவிலியருக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை. கொரோனா தொற்று இல்லையென்றாலும் அவரை சில நாட்கள் தனிமைப்படுத்தி வைக்க மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மேலும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இருவரும் கடுமையான வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தோனேசியாவில் தற்போது வரை 7,27,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 21,000 பேர் மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். பிரிட்டனிலிருந்து உருமாறிய கொரோனா தற்போது வேகமாக பரவி வருவதால் அங்கு தெற்கு ஆசிய நாடுகளிலிருந்து வரும் வெளிநாட்டினருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe