முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகள் நாளுக்கு நாள் பறிபோகும் நிலையில் காபட் வீதிகளுக்கும், அபிவிருத்திகளுக்கும் நாடாளுமன்றில் முஸ்லிம் தலைவர்கள் இருப்பதாக தேசிய விடுதலை மக்கள் முன்னணியின் தேசியத் தலைவர் முஸம்மில் மொஹிதீன் தெரிவித்துள்ளார்.
தேசிய விடுதலை மக்கள் முன்னணியின் கட்சி காரியாலயத்தில் வைத்து நேற்று மாலை ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டிலுள்ள முஸ்லிம் மக்களின் அடிப்படை உரிமைகள் நாளுக்கு நாள் மறுக்கப்பட்டு வருகின்றன, தொழமுடியவில்லை, ஜனாஸாவை அடக்க முடியாது, மத்தரஸாக்கள் நடத்த இயலாது இவ்வாரான முஸ்லிம் மக்களின் அடிப்படை உரிமைகளைக் கூடச் செய்ய முடியாத நிலை உள்ளது.
இவ்வாறு இருக்கும் நிலையில் காபட் வீதிகளுக்கும், அபிவிருத்திகளுக்கும் முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகள் அனைத்தையும் பறிகொடுத்து இருபதாவது திருத்தச்சட்டத்திற்குக் கையை உயர்த்தியுள்ளார்கள்.
இவர்களின் நிலைப்பாட்டினை வாக்களித்த மக்களிடம் தெளிவுப்படுத்தக் கூட முடியாத நிலையில் உள்ளார்கள்.
ஆகவே இவர்களைப் பற்றி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினராக இருந்த அலிஸாஹிர் மௌலானாவின் இறுதிக் கடிதத்திலே தெள்ளத் தெளிவாக எழுதியிருக்கிறார் எனக் கூறியுள்ளார்.