Ads Area

கொரோனா சட்டத்தை மீறி திருமலைக்கு கொண்டுசெல்லப்பட்ட லொஸ்லியாவின் தந்தை உடல்?

பிக்பாஸ் புகழ் லொஸ்லியாவின் தந்தையின் பூதவுடல், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

வெளிநாடுகளில் உயிரிழக்கும் இலங்கைப் பிரஜைகளின் உடல் நாட்டிற்கு கொண்டுவரும்போது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேரடியாக நீர்கொழும்பு வைத்தியசாலையின் சவச்சாலைக்கு அனுப்பிவைக்கப்படும்.

அங்கு பி.சி.ஆர் பரிசோதனை உட்பட பல்வேறு பரிசோதனைகளின் பின்னரே உறவினர்களுக்கு வழங்கப்படும் அல்லது அரசாங்கத்தின் உதவியில் தகனம் செய்யப்படும்.

ஆனால் கனடாவில் திடீரென உயிரிழந்த லொஸ்லியாவின் தந்தையின் உடல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து எந்தவொரு தனிமைப்படுத்தல் சட்டத்தையும் பின்பற்றப்படாமல் திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe