Ads Area

சர்வதேச உணவு விழாவில் பலரையும் ஈர்த்த இலங்கையின் கொத்துரொட்டியும் அப்பமும்.

வியட்நாம் – ஹெனோயில் சர்வதேச உணவு விழா நடைபெற்றுள்ள நிலையில் அதில், வியட்நாமிலுள்ள இலங்கைக்கான தூதரகம் மற்றும் வியட்நாம் வெளிவிவகார அமைச்சு ஆகியன இணைந்து மிக விமர்சையாக உணவு விழாவை கொண்டாடியுள்ளனர்.

இந்த விழாவில் இராஜதந்திர தூதுக்குழுக்கள், சர்வதேச அமைப்புக்கள், ஹெனோயிலுள்ள அரச சார்ப்பற்ற அமைப்புக்கள், வியட்நாம் வெளிவிவகார அமைச்சு, மாகாண ஆளுநர் அலுவலகம் உள்ளிட்ட நிறுவனங்களின் அதிகாரிகளும் கலந்துக்கொண்டுள்ளனர்.

அத்துடன், வியட்நாமிலுள்ள உணவு மற்றும் குடிபானங்கள் தொடர்பிலான நிறுவனங்களின் பிரதானிகளும் இந்த விழாவில் கலந்துக்கொண்டுள்ளனர்.

சுமார் 1500ற்கும் அதிகமானோர் இந்த உணவு விழாவில் கலந்துக்கொண்டிருந்த அதேவேளை, 115 உணவு விநியோக நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த உண்வுவிழாவில் வியட்நாம் பிரஜைகள், இலங்கையின் உணவு வகைகளை மிகவும் விரும்பி உட்கொண்டதாக அறிய முடிகின்றது. குறிப்பாக இலங்கை கொத்து ரொட்டி மற்றும் அப்பம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளமை விசேட அம்சமாகும்.

இதன்போது உடனுக்குடன் உணவு வகைகள் தயாரிக்கப்பட்டு, வியட்நாம் பிரஜைகள் மற்றும் வெளிநாட்டு பிரஜைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் உணவு வகைகளுடன் சிலோன் டீ நாமத்துடனான தேனீரும் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறபப்டுகின்றது.

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe