தகவல் - சம்மாந்துறை அன்சார்.
டுபாயில் தனது வீட்டுப் பணிப்பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த பாகிஸ்த்தான் நாட்டைச் சேர்ந்த முதலாளிக்கு ஒருவருக்கு அந் நாட்டு நீதிமன்றம் பத்து வருட சிறைத் தண்டனை விதித்துள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் டுபாயில் வசிக்கும் பாகிஸ்த்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் தனது வீட்டில் வேலைக்கு அமர்த்திய வீட்டுப் பணிப்பெண்ணை அவர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த வேளை பாலியல் பலாத்காரம் செய்தமைக்காக அந் நாட்டு நீதிமன்றம் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளதோடு, நாடு கடத்தவும் உத்தரவிட்டுள்ளது.
அங்கோலா (Angola) நாட்டைச் சேர்ந்த 30 வயது நிரம்பிய வீட்டுப் பணிப் பெண் ஒருவர் டுபாயில் அல் பார்ஷா (Al Barsha) பகுதியில் டுபாயில் வசிக்கும் பாகிஸ்த்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவரது வீட்டில் பணிபுரிந்து வந்துள்ளார். அப் பெண் வீட்டு வேலைகளை முடித்து விட்டு வழமை போன்று தனது அறையினுல் அயர்ந்து துாங்கிக் கொண்டிருந்த போது அறைக்குல் நுழைந்த அவரது முதலாளி அவரை பாலியல் பலாத்காரம் புரிந்துள்ளார்.
கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் நிகழ்ந்த இச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பணிப்பெண் டுபாயில் பொலிஸில் முறைப்பாடு செய்தமைக்கு இணங்க அவரது முதலாளி கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது, தற்போது அவ் வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில் அவருக்கு பத்து வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதோடு, நாடு கடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
செய்தி மூலம் - https://gulfnews.com