Ads Area

உலகில் மிகவும் பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் 2வது இடத்தை தட்டிச் சென்ற தோஹா கத்தார்.

தகவல் - சம்மாந்துறை அன்சார்

உலகில் மிகவும் பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் தோஹா கத்தார் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. 

நகரங்களின் பாதுகாப்பு மற்றும் அங்கு இடம் பெறும் குற்றங்களின் விகிதம் போன்றவற்றின் அடிப்படையில் உலகில் உள்ள 431 நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே தோஹா கத்தார் 2வது இடத்தினைப் பிடித்துள்ளது.

தோஹா கத்தார் 87.96 வீதம் மிகவும் பாதுகாப்பான நகரமாகவும் அங்கு குற்றங்களின் விகிதம் 12.04 ஆகவும் இருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் 10 பாதுகாப்பான நகரங்களில் Abu Dhabi, UAE; Taipei; Quebec City, Canada; Zurich, Switzerland; Sharjah, UAE; Dubai, UAE; Eskisehir, Turkey; Munich, Germany; and Trieste, Italy ஆகிய நாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 2020 ஜூலை மாதம் வெளியிடப்பட்ட கணிப்பீட்டின் படியும் கத்தார் உலகளவில் ‘பாதுகாப்பான நாடு’ என்ற நிலையைத் தக்க வைத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

செய்தி மூலம் - https://gulfnews.com



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe