Ads Area

சவுதியிலிருந்து Exit-Reentry விசாவில் சென்று மீண்டும் வராவிட்டால் 3 வருடங்களுக்கு சவுதிக்குல் நுழையத் தடை.

தகவல் - சம்மாந்துறை அன்சார்.

சவுதி அரேபியாவில் பணிபுரியும் ஒருவர் எக்சிட்-ரிஎன்றி (Exit-Reentry) விசாவில் தனது தாய் நாடு சென்று அவரது Exit-Reentry விசா முடிவதற்கு முன்னர் சவுதிக்கு திரும்பாவிட்டால் அவருக்கு சவுதிக்குல் நுழைய 3 வருடங்கள் தடை விதிக்கப்படும் என சவுதி அரேபிய ஜவசாத் அலுவலகம் தற்போது தெரிவித்துள்ளது.

ஆனால் Exit-Reentry விசாவில் சென்ற ஒருவரது விசா முடிந்து அவர் மீண்டும் முன்னர் வேலை செய்த அதே நிறுவனத்திற்கு புதிய விசாவில் வருவதற்கு தடையில்லை, உடனடியாக வரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit-Reentry விசாவில் தாய் நாடு சென்று மீண்டும் சவுதிக்குத் திரும்பாதவர்கள் தொடர்ச்சியாக சவுதி அரேபிய ஜவசாத் அலுவலகத்திடம் முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே சவுதி ஜவசாத் அலுவலகம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.

ஆகவே ஒருவர் Exit-Reentry விசாவில் நாடு சென்று மீண்டும் சவுதிக்கு வராது விட்டால் அவர் மூன்று வருடங்களுக்குப் பின்னர்தான் சவுதிக்கு வர முடியும் ஆனால் ஒருவர் பைனல் எக்சிட் விசாவில் (Final Exit) சென்றால் அவரால் சவுதிக்கு உடனே வர முடியும் அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.

செய்தி மூலம்https://saudigazette.com.sa




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe