தகவல் - சம்மாந்துறை அன்சார்
சவுதி அரேபியாவின் ஜிஷான் (Jizan) அடுத்த அபு அரிஷில் ஒரு வீட்டில் ஏற்பட்ட பயங்கரமான தீ விபத்தில் மூன்று குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்,மேலும் நான்கு பேர் படுகாயமடைந்தனர்.
மூன்று சிறுவர்களுக்கும் எட்டு மற்றும் இரண்டு வயதுக்கும் இடையில் உள்ளவர்கள். இதில் இரண்டு சிறுவர்களும் ஒரு சிறுமியும் அடங்கும், கிங் பைசல் சாலைக்கு மிக அருகிலுள்ள உள்ள வீட்டில் இந்த விபத்து நடந்துள்ளது.
மேலும் இந்த தீவிபத்து நடந்த நேரத்தில் வீட்டில் இருந்த தாய் மற்றும் மூன்று குழந்தைகளும் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது.
செய்தி மூலம் - https://gulfnews.com