தகவல் - சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபியாவின் தபுக் நகரில் சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்த பஸ் ஒன்றில் மீது சாலையினைக் கடக்க முயன்ற ஒட்டகம் மோதியதினால் ஏற்பட்ட விபத்தில் பேருந்து கவிழ்ந்து மூன்று பேர் உயிழந்து, 30 பேர் வரை காயமடைந்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்த சிவில் பாதுகாப்பு வீரர்களின் முயற்சி மூலம் கவிழ்ந்த பஸ்ஸிலிருந்து மூன்று இறந்தவர்கள் உடல்கள் மீட்கப்பட்டது. மேலும் படுகாயங்களுடன் 16 பேர் தைமா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இதைதவிர சிறிய காயங்கள் ஏற்பட்ட 14 பயணிகளுக்கு சம்பவ இடத்திலே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
விபத்தில் சிக்கி உயிரிழந்த பயணிகள் மற்றும் காயமைடந்த பயணிகள் எந்தெந்த நாட்டவர்கள் என்ற விபரம் எதுவும் தெரியவில்லை.
செய்தி மூலம் - https://gulfnews.com