தகவல் - சம்மாந்துறை அன்சார்.
டுபாயில் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பஸ் வண்டி ஒன்று எதிரே வந்த ட்ரைலர் (Trailer) ரக வாகனத்தில் மோதியில் ஏற்பட்ட விபத்தில் 30 தொழிலாளர்கள் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று காலை சரியாக 8.45 மணியளவில் துபாய் முதலீட்டு பூங்கா (DIP) பகுதியில் நிகழ்ந்துள்ளது. இறையருளால் எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்த 30 தொழிலாளர்களும் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்னர்.
செய்தி மூலம் - https://www.khaleejtimes.com