பட்டினிக்கொலை செய்யப்பட்ட குழந்தையின் மரணத்திற்கு நீதி கோரி வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம்....!!!!
அண்மையில் பெரியகல்லாற்றில் உறவினர் வளர்ப்பில் இருந்த சிறுமி ஒருவர் பராமரிப்பில்லாமல் பட்டினிக்கொலை செய்யப்பட்டு முழு இலங்கையை உலுக்கிய சம்பவமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவானது.
இன்று பிரதேசத்திலுள்ள மக்கள் ஒன்றிணைந்து அக்குழந்தையின் மரணத்திற்கு நீதி கோரி வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். இப்படியான இரக்கமற்றவர்கள் தண்டிக்கப்படவேண்டும். அக்குழந்தைக்கு நாம் அனைவரும் நீதி பெற்று கொடுக்க வேண்டும்.
குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.அவர்கள் தண்டனை பெற வேண்டும்.