பொது சுகாதார ஆய்வாளர்களின் முகத்தில் துப்பிய அதுலுகமவைச் சேர்ந்த கொவிட் -19 யினால் பாதிக்கப்பட்ட நபருக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் 3 குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதையடுத்து அவருக்கு 6 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது.
பொலிசார் சந்தேக நபரை கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி கைது செய்து பாணந்துறை மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் ரிமாண்ட் செய்யப்பட்டார்.
கொரோனா தொற்றுக்குள்ளான குறித்த நபரை கொரோனா சிகிச்சை மையத்திற்கு கொண்டு செல்ல பொது சுகாதார பரிசோதகர்களை அவரை அழைத்த போது அதற்கு மறுப்புத் தெரிவித்து பொது சுகாதார ஆய்வாளர்களின் முகங்களில் அவர் காரி துப்பியிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.