தகவல் - சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபியாவில் நடை முறையிலிருக்கும் ஆட்சி முறையினை மாற்ற முயற்சிகள் மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் லூஜெய்ன் அல்-ஹத்லூலுக் என்ற சவுதி அரேபிய பெண் ஒருவருக்கு 68 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவர் இணையத்தின் ஊடாக சவுதி அரேபிய சட்டம் மற்றும் பொது ஒழுங்கிற்கு எதிராக செயற்பட்டமை, ஆட்சி முறைமையினை மாற்ற முயற்சித்தமை, சவுதியில் இருந்து கொண்டு வெளிநாட்டு நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் சென்றமை ஆகிய பயங்கரவாத குற்றச் செயலில் ஈடுபட்டார் என்ற அடிப்படையில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு 68 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. பின்னர் நீதிமன்றம் அவரது தண்டனையினை 34 மாதங்களாக குறைத்திருந்தது.
இந் நிலையில் சிறையில் தான் பல சித்திரவதைகளை அனுபவித்து வருவதாக லூஜெய்ன் அல்-ஹத்லூலுக் தெரிவித்திருந்தார், அது தொடர்பிலும் சிறையில் உள்ள கண்காணிப்புக் கெமறாக்கள் ஊடாக விசாரனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாகவும் சவுதி செய்திகள் தெரிவிக்கின்றன.
விரிவான ஆங்கில செய்திக்கு - https://lifeinsaudiarabia.net and https://www.arabnews.com