சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபியாவில் சீட் பெல்ட் அணியாது வண்டி ஓட்டி அதன் மூலம் அபராதம் விதிக்கப்பட்ட ஒருவர் தனது கவலையை இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நான் இலங்கையைச் சேர்ந்தவன், சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் சுமார் 10 வருடங்களாக நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகின்றேன். நேற்று எனக்கு தொலைபேசிக்கு சவுதி அரேபிய ட்ராபிக் போலிசிலிருந்து (Moroor) குறுஞ் செய்தி ஒன்று வந்தது செய்தியைப் படித்துப் பார்த்தேன் அதில் நான் வண்டி ஓட்டும் போது சீட் பெல்ட் அணியவில்லையாம் அதற்கு 150 ரியால் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. பிறகு சிறு நேரத்தில் மற்றொரு குறுஞ் செய்தி வந்தது அதிலும் சீல் பெட் அணியாமைக்காக 150 ரியால் அபராதம் செலுத்துமாறு குறிப்பிடப்பட்டிருந்தது ஆக மொத்தம் 300 ரியால் அபராதம் வந்திருந்தது.
நான் சவுதியில் சுமார் 10 வருடங்களாக வாகனம் ஓட்டும் அனுபவம் பெற்றவன் இந்த பத்து வருடங்களில் எனக்கு போக்குவரத்து விதி மீறல்களினால் அபராதங்கள் வந்ததில்லை காரணம் நான் போக்குவரத்து சட்டங்களை கடுமையான முறையில் பின்பற்றியே இங்கு வண்டி ஓட்டுகிறேன்.
அப்படியிருந்தும் சீல் பெல்ட் அணியவில்லை என்று எனக்கு இரண்டு தடவை அபராதங்கள் விதிக்கப்பட்டிருந்தது ஆனால் இதனை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாதிருந்தது, உடனே நான் எனது அப்சர் கணக்கை திறந்து அதில் அபராதம் தொடர்பான சகல விடையங்களையும் பார்த்தேன் அங்கே எனது புகைப்படத்தினை ஆதாரபூர்வமாக போட்டிருந்தார்கள். புகைப்படத்தினை பார்த்த பிறகுதான் எனது தவறை நான் உணர்ந்து கொண்டேன் ஆம்...நான் சீல் பெல்ட் அணியாதுதான் வண்டி ஓட்டிருக்கின்றேன்.
போக்குவரத்து சட்டதிட்டங்களை கடுமையாக பின்பற்றும் நான் எப்படி சீல் பெல்ட் அணியாது விட்டிருப்பேன் என கவலை ஒரு பக்கம் இருந்தது, சில நேரம் மறதியினால் அல்லது வேறு சிந்தனையில் அணியாது விட்டிருக்கலாம் என மனதை தேற்றிக் கொண்டு அபராதத்தையும் கட்டி விட்டேன்.
எனக்கு ஏற்பட்ட இந் நிகழ்வை சவுதியில் வாகனம் ஓட்டுபவர்களுக்கும் ஒரு விழிப்புணர்வாக வழங்கலாம் என்ற எண்ணத்தில்த்தான் இதனை நான் இங்கு பதிவிடுகின்றேன்.
சவுதி அரேபியாவில் வாகன போக்குவரத்து சட்டங்கள் மிகக் கடுமையாக அமுல்படுத்தப்பட்டு வருவதனை சவுதியில் இருக்கும் யாவரும் அறிந்திருப்பீர்கள். சவுதியில் உள்ள சகல வீதிகளிலும் கண்காணிப்புக் கெமறாக்கள் பொருத்தப்பட்டு ஒவ்வொரு வாகனங்களும் கண்காணிக்கப்படுகிறது யாராவது விதி மீறல்களில் ஈடுபட்டால் உடனே அபராதங்கள் விதிக்கப்படுகிறது, அபராதத் தொகைகளும் கடுமையான அளவே விதிக்கப்படுகின்றது. சீல் பெல் அணியாது விட்டால், வண்டி ஓட்டும் போது போன் பாவித்தால், நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை தாண்டி வண்டி ஓட்டினால், சிக்கனலில் நில்லாது சென்றால் என பல விடையங்களுக்கு இங்கே அதிகமான அபராதங்கள் விதிக்கப்படுகிறது.
ஆகவே...தயவு செய்து சவுதியில் வாகனம் ஓட்டுவோர் இவ்வாறான அபராதங்களில் அகப்பட்டு வீணாக உங்களது பணங்களை என்னைப் போல் இழந்து விடாமல் அவதானமாக வண்டி ஓட்டுங்கள், வீதிப் போக்குவரத்து சட்டத்தினை மதித்து வண்டி ஓட்டுங்கள்....முக்கியமா சீல் பெல்ட் போட மறந்திடாதிங்க.