Ads Area

திருப்பி அனுப்ப பணம் இல்லை; ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 7 மாதங்களாக பிணவறைலுள்ள பணிப்பெண்ணின் உடல்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மாரடைப்பு காரணமாக மரணமடைந்த வீட்டுப் பணிப் பெண் ஒருவரின் உடலினை அவரது சொந்த நாட்டுக்கு வரவழைக்க அவரது குடும்பத்தினரிடம் பணம் இன்மையால் கடந்த 7 மாதங்களாக அவரது உடல் மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

உகண்டா நாட்டைச் சேர்ந்த 37 வயதான மெய்முனா நாசாலி என்ற வீட்டுப் பணிப்பெண்ணே கடந்த ஜூன் 18, 2020 அன்று மாரமடைப்புக் காரணமாக மரணமடைந்துள்ளார்.

கணவனைப் பிரிந்திருந்த மரணமடைந்த பணிப் பெண் தனது 4 குழந்தைகளையும் தனது பெற்றோருடன் விட்டுவிட்டு, அவர்களை காப்பாற்ற வீட்டுப் பணிப்பெண்னாக வேலை செய்ய ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு வந்திருக்கின்றார் இந் நிலையில் அவருக்கு ஏற்பட்ட மாரடைப்புக் காரணமாக மரணத்தை தழுவியுள்ளார்.

மரணமடைந்த மெய்முனா நாசாலியின் உடலை அவரது சொந்த நாடான உகாண்டாவிற்கு அனுப்புவதற்காக 10 ஆயிரம் டாலர்கள் தேவைப்படுகிறது என்றும் அவற்றில் 3000 டாலர்கள் மாத்திரமே திரட்டப்பட்டிருப்பதாகவும் நாசாலியின் உடலை அவரது சொந்த நாடான உகண்டாவுக்கு அனுப்பி வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ள  துபாயில் வசிக்கும் அப்துலா லுயம்பாஸி என்பவர் தெரிவித்துள்ளார்.  

தனது தாயின் உடலை பார்க்கத் காத்திருக்கும் நாசாலியின் பிள்ளைகளும், நாசாலியின் பெற்றோரும் ஐக்கிய அரபு எமிரேட் குடியிருப்பாளர்களிடமிருந்து உதவியை நாடுகின்றனர் உதவி செய்ய விரும்புவோர் 0558273097 என்ற எண்ணில் அப்துலா லுயம்பாஸி என்பவரை தொடர்பு கொள்ளலாம்.

தமிழில் - சம்மாந்துறை அன்சார்

செய்தி மூலம் - https://www.khaleejtimes.com




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe