இந்தியாவினால் அன்பளிப்பு செய்யப்பட்ட ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளை ஜனாதிபதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொறுப்பேற்றுள்ளார்.
இந்தியாவினால் அன்பளிப்பு செய்யப்பட்ட ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசிகளுடனான விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
5 இலட்சம் தடுப்பூசிகள் இதன்போது கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய விமான சேவைக்கு சொந்தமான A I - 281 விமானத்தின் ஊடாக இன்று காலை 11.35 மணியளவில் குறித்த தடுப்பூசிகள் எடுத்துவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
42 பெட்டிகளில் அடைக்கப்பட்ட நிலையில் குறித்த தடுப்பூசிகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
madawla news.