இலங்கையில் பொது மக்களுக்கு பொலிஸார் முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளனர்.
இதன்படி தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் ஏதேனும் விடயம் தொடர்பில் தகவல் இருந்தால் அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண கூறுகையில்,
தேசிய பாதுகாப்பு, போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றக் கும்பல்கள் அச்சுறுத்தல் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்காக கடந்த ஜூலை மாதம் சிறப்பு நடவடிக்கை மையம் நிறுவப்பட்டது.
எனவே இது தொடர்பான தவல்களை பொது மக்கள் சிறப்பு பொலிஸ் நடவடிக்கை மையத்தின் அவசர இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு வழங்க முடியும்.
1997 என்பதே குறித்த அவசர இலக்கம் என்பதுடன், பொதுமக்களிடமிருந்து தகவல்களைப் பெறுவதற்காக சிறப்பு நடவடிக்கை மையத்தில் பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.