சவுதி அரேபிய பெண் ஒருவருக்கு ஆபாசமான முறையில் சைகை காட்டிய 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரை சவுதி அரேபிய பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
சவுதியில் கார் ஓட்டிச் சென்ற ஒரு பெண்ணின் காருக்கு அருகாமையில் தனது காரை நிறுத்திய சவுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர் அப் பெண்ணிடம் ஆபாசமான முறையில் சைகை செய்து அதனை வீடியோவாகப் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகியதைத் தொடர்ந்து பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.
துன்புறுத்தல் மற்றும் சைபர்-கிரைம் ஆகிய குற்றங்களின் கீழ் அவரை சவுதி அரேபிய பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்து மேலதிக விசாரனைகளை மேற் கொண்டு வருகின்றனர்.
சவுதியில் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு எதிரான தன் நிலைப்பாட்டினையையே அவர் ஆபாசமான முறையில் சைகை மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
சவுதி அரேபியா கடந்த 2018 ஆம் ஆண்டில் வரலாற்றில் முதல்முறையாக பெண்களை வாகனம் ஓட்ட அனுமதித்து பல தசாப்தங்களாக பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை முடிவுக்குக் கொண்டுவந்திருந்தது எனினும் இதனை சவுதியில் உள்ள சில பழமைவாதிகள் வெறுத்து வருகின்றமை குறிப்பிடத் தக்கதாகும்.
ஆதாரம் - https://gulfnews.com
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.