தகவல் - சம்மாந்துறை அன்சார்.
ஜோர்தானில் 44 வயது நிரம்பிய ஒருவர் தனது 16 வயது மகளை 300க்கு மேற்பட்ட தடவைகள் பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு அவருக்கு ஏழரை வருடங்கள் சிறைத் தண்டனை விதித்து ஜோர்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வீட்டில் சிறுமியில் தாய் இல்லாத சமயங்களில் தனது 16 வயது மகளை மிரட்டி பலாத்காரம் செய்து வந்துள்ளார் என்றும் இவர் தனது மகளை சிறுவயது முதலே இவ்வாறு பலாத்காரம் செய்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஜோர்தானில் இவ்வாறான குற்றச் செயல் இடம் பெறுவது இது முதன் முறையல்ல இதற்கு முன்னர் கடந்த 2018ம் ஆண்டு 50 வயது நபர் ஒருவர் தனது மகளை பாலியல் பலாக்காரம் செய்த குற்றத்திற்காகவும் தனக்கு இருந்து எயிட்ஸ் நோயினை தனது மகளுக்கும் பரப்பிய குற்றத்திற்காகவும் கைது செய்யப்பட்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத் தக்கதாகும்.