Ads Area

சம்மாந்துறை ஸ்ரீலங்கா லைஃப் கயர் அமைப்பினரால் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு.

( நூருள் ஹுதா உமர், ஐ.எல்.எம். நாஸீம் )

சம்மாந்துறையை தளமாக கொண்டு இயங்கும் ஸ்ரீலங்கா லைஃப் கயர் நிறுவனதினூடாக வாழ்வாதரமற்ற சுமார் 50 சம்மாந்துறை பிரதேச மாணவர்களுக்கு அத்தியவசிய பாடசாலை உபகரணங்கள் நேற்றும், இன்றும் வழங்கி வைக்கப்பட்டது. 

கொவிட் -19 தொற்றினால் பாடசாலைகள் மூடப்பட்டு மாணவர்கள் கல்வி நிலையில் பல அசெளகரீகங்களை சந்தித்து வரும் இக்காலகட்டத்தில் தொழிலிழப்புக்களும் பரவலாக காணப்படுகிறது. 

இத் தொற்றினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் உள்ள மாணவ, மாணவிகள் பலர் கல்வியினை தொடர முடியா நிலையும் கோவிட் காரணமாக ஏற்பட்டன. 

இதனை கருதில் கொண்டு அவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள ஊக்குவிக்கும் வகையில் முதற் கட்டமாக வாழ்வாதரமற்ற சுமார் 50 மாணவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் ஸ்ரீலங்கா லைஃப் கயர் நிறுவனத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டது பாடசாலை உபகரணங்களை வீடு வீடாக சென்று வழங்கி வைத்தனர்.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe