யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் போரில் கொல்லப்பட்டவர்கள் நினைவாக அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடித்து அழிக்கப்பட்டதைக் கண்டித்து கனடாவில் ஞாயிற்றுக்கிழமை மாபெரும் வாகனப் பேரணி இடம்பெற்றது.
சுமார் 4,000 வரையான வாகனங்களுடன் போராட்டக்காரர்கள் இந்த எதிர்ப்பு வாகனப் பேரணியில் பங்கேற்றனர்.
கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு மத்தியில் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி, சமூக இடைவெளி பேணியவாறு கனேடியத் தமிழர்களால் இந்த வாகனப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.
பிராம்ப்டன் சிட்டி ஹோலில் தொடங்கிய வாகனப் பேரணி அங்கிருந்து நகர்ந்து குயின்ஸ் பார்க்கில் உள்ள ரொரண்டோ சிற்றி ஹோலில் நிறைவடைந்தது.
இதில் கனடா எம்.பி. ஹரி ஆனந்தசங்கரி பிரம்டன் நகர மேயர் பட்ரிக் பிறவுண் உள்ளிட்ட கனேடிய அரசியல் வாதிகள் பங்கேற்றனர்.