Ads Area

தூபி உடைப்பெதிர்ப்பு ஹர்த்தால் காரணமாகக் கிளிநொச்சி முடங்கியுள்ளது.

யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அழிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஹர்த்தால் காரணமாகக் கிளிநொச்சியும் முடங்கியுள்ளது.

கிளிநொச்சி நகரில் பொதுச் சந்தை, மருந்தகங்கள், உணவகங்கள் என அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. அரச போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துகள் மாத்திரமே போக்குவரத்தில் ஈடுபட்டுள்ளன.

வங்கிகள் மற்றும் அரச நிறுவனங்கள் திறக்கப்பட்டிருந்த போதும் போது மக்கள் இன்றியே காணப்படுகின்றன. அத்தோடு பாடசாலைகள் நீண்ட இடைவெளிக்குப் பின் ஆரம்பிக்கப்பட்ட போதும் மாணவர்களின் வரவு மிக மிகக் குறைவாக உள்ளமையால் பாடசாலைகளின் செயற்பாடுகளும் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளன.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe