உயிரிழந்த எங்களுடைய உடன்பிறவா உறவுகளின் நினைவாக யாழ் பல்கலைகக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் அழிக்கப்பட்டமை அனைத்து தமிழ் மக்களையும் மன வேதனைக்குள்ளாக்கியுள்ளன.
நினைவுச் சின்னத்தை உடைத்ததற்கும் எமக்கு சம்மந்தம் இல்லை என்ற கருத்தை அரசாங்கம் முன்வைத்திருக்கின்றார்கள் இதன்போது அரசாங்கம் செய்யவில்லையானால் அந்த நினைவு கட்டிடத்தை மீள அமைப்பதற்கு அரசாங்கம் அனுமதி தரவேண்டும் என்கின்ற கோரிக்கை முன்வைத்தும் நாளை (2020/01/11) வடக்கு கிழக்கில் அனுஷ்டிக்கப்படவிருக்கின்ற பூரண ஹரர்தாலுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கி எமது கோரிக்கையை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என கல்முனை மாநகர சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் அறைகூவல் விடுத்துள்ளார்.
கல்முனை ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் கூறுகையில்,
இன்று யாழ்ப்பாணத்தில், நாளை அம்பாறையில் நடக்கலாம் ,மட்டக்களப்பில் நடக்கலாம் ஆகவே வர்த்தக சங்கங்கள், பொது அமைப்புக்கள், பொதுமக்கள் ,அரச ஊழியர்கள் இந்த நினைவுச்சின்னத்திற்காக எமது உறவுகளின் உயிர்களை நினைவு கூறுவதற்காக நாளை அனைவரும் இந்த ஹார்த்தாலை இன மத பேதமின்றி கட்சி பேதமின்றி அனுஷ்டிக்க முன்வர வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த காலத்தில் அரசுக்கு ஆதரவு வழங்கியது, என்ன செய்தது என்று பலர் கூறினார்கள் ஆம் எமது நிலங்களை சுரண்டவோ ,நினைவுச்சின்னங்களை அழிக்கவோ அரசாங்த்தை விடாது த.தே.கூட்டமைப்பு தடுத்து வந்தது.
அரசுக்கு முட்டுக்கொடுத்துக்கொண்டிருக்கும் கௌரவ அமைச்சர் டக்களஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், சிவனேசதுரை சந்திரகாந்தன், இராஜாங்க அமைச்சர் வியாளேந்திரன் இந்த சம்பவத்திற்கு என்ன கூறப்போகின்றார்கள்? இந்த நினைவுத்தூபியை மீள அமைக்க அனுமதி பெற்றுத்தரவேண்டும் இல்லை என்றால் வரும் காலத்தில் அரசியல்வாதிகள் என்று கூறிக்கொண்டு மக்களிடம் வாக்கு கேட்டுவர அருகதையற்றவர்கள் என்றார்.