சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் இந்தியாவின் 72வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினரினால் மாபெரும் இரத்ததான முகாம் ஒன்று அண்மையில் (22/01/2020) நடாத்தப்பட்டுள்ளது.
தேசம் கடந்து மனித நேய, சமூகப் பணிகள் செய்து வரும் தவ்ஹீத் ஜமாஅத்தின் தன்னார்வ தொண்டர்கள் இரத்ததானம் செய்வதிலும் தொடர்ந்து பல்வேறு நாடுகளில் செயலாற்றி வருகின்றனர், அதன் ஒருபகுதியாக இந்திய நாட்டின் 72வது குடியரசு தினத்தை முன்னிட்டு ரியாத் மாநகரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) மற்றும் கிங் பஹத் மெடிக்கல் சிட்டி (KFMC) மருத்துவமணையுடன் இணைந்து நடத்திய 113-வது மாபெரும் இரத்ததான முகாம் 22/01/2020, வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமில் 114 க்கும் மேற்பட்ட சகோதரர்கள் பதிவு செய்து 101 நபர்கள் இரத்ததானம் செய்தனர்.
இம்முகாமில் கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கொடையாளர்கள் ஒரே நேரத்தில் இரத்தவங்கி வளாகத்தில் ஒன்று கூடுதல் தவிர்க்கப்பட்டு ரியாத் மண்டலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் குறிப்பிட்ட கால இடைவெளியில் மக்கள் வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அத்துடன் “முக கவசம், சானிடைசர், க்ளவுஸ்” போன்ற கொரோனா நோய் பரவல் தடுப்பு ஏற்பாடுகள் இரத்தவங்கி வளாகத்தில் செய்யப்பட்டிருந்தது. மேலும் இந்த முகாமின் அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தன்னார்வ தொண்டர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.