ஹட்டன் பன்மூர் தோட்ட தொழிலாளர் லயன் அறையின் குடியிருப்பு ஒன்றுக்குள் நாகப்பாம்பு இருந்துள்ளது. சுமார் 2 அடி நீலமான பாம்பொன்று அறையினுள் இருந்துள்ளது. அதனை நேற்று செவ்வாய்க்கிழமை பகல் 11 மணியளவில் கண்ட வீட்டின் உரிமையாளர், கம்பொன்றை எடுத்து, அப்பாம்பை விரட்டுவதற்கு முயற்சித்துள்ளார்.
எனினும், அப்பாம்பு தனது தலையைத் தூக்கி படமெடுத்து காண்பித்துள்ளது. அதன்பின்னர், பிளாஸ்டிக் வாளியொன்றுக்குள் பாம்பை பிடித்து, ஹட்டன் பொலிஸாருக்கும் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கும் அறிவித்துள்ளார்.
Madawala News.