Ads Area

கொழும்பின் ஆறு வைத்தியசாலைகளில் கொரோனா தடுப்பூசி வழங்க நடவடிக்கை

கொழும்பின் ஆறு மருத்துவமனைகளில்கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கைகள் வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளன. இதனை பொதுசுகாதார சேவைகள் பிரதிபணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

அதன்படி கொழும்பு தேசிய வைத்தியசாலை, கொழும்பு தெற்குபோதனா வைத்தியசாலை, கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலை, ஹோமாஹம ஆதார வைத்தியசாலை, முல்லேரியா வைத்தியசாலை மற்றும் தொற்றுநோய் வைத்தியசாலை ஆகியவற்றில் இவ்வாறு தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அடுத்தவாரம் ஏனையவைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் மருந்தினை வழங்கும் நடவடிக்கைகள் இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe