காலாவதியான வாகன சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம், ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான காலப்பகுதில் காலாவதியாகும் அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக, மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது.
கொரோனாத் தொற்று நிலைமை காரணமாக இந்தச் சலுகை வழங்கப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மடவளை நிவுஸ்.